அமைச்சர் மா.சுப்ரமணியன் pt desk
தமிழ்நாடு

திருச்சி: சைனா நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி, உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: வி சார்லஸ்

திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

குரங்கம்மை சோதனை

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது... “விமான நிலையங்களில் குரங்கம்மை நோய்க்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இன்று சோதனை நடத்தினோம். 27 ஆயிரம் பயணிகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டு பத்து படுக்கைகளுடன் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

டெங்கு பாதிப்பு:

டெங்கு பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு இல்லாதவகையில் இந்த ஆண்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் இறந்துள்ளனர்.

காலி பணியிடங்கள்:

தொடர்ந்து சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. நேற்று கூட மருந்தாளுனர்கள் 946 பேருக்கு பணி நியமன ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் தொடர்ந்து முதல்வர் ஆணைப்படி நிரப்பும் பணியை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

சைனா நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி மரணித்த விவகாரம்:

திருச்சி அரியமங்கலம் பகுதியில் அமேசான் மூலம் சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவு மருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளோம்” என தெரிவித்தார்.