தமிழ்நாடு

“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்?” - விஜயபாஸ்கர் விளக்கம்

“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்?” - விஜயபாஸ்கர் விளக்கம்

webteam

அம்மா குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். 

பின்னர் அம்மா குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், அம்மா குடிநீர் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக குடிநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும் விரைவில் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கும், அம்மா குடிநீர் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 6 பெரிய அரசு மருத்துவமனைகளில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் அம்மா உணவகங்களில் உணவு தரம் குறைந்துள்ளதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.