தமிழ்நாடு

"அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது"-மருத்துவமனை தகவல்!

"அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது"-மருத்துவமனை தகவல்!

jagadeesh

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், தற்போது எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் காமராஜூக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டதாக எம்ஜிஎம் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.