முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு pt web
தமிழ்நாடு

“நிறையபேர் களத்தில்.. நாடாளுமன்ற தேர்தல் சூழல் 2026-ல் இருக்காது”-கே.என்.நேரு பேசியதன் அர்த்தம்என்ன?

அமைச்சர் நேருவின் இந்த பேச்சு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உடையும் என்பதை சூசகமாக தெரிவிக்கிறது என உடன்பிறப்புகள் முனுமுனுத்தபடி கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

PT WEB

திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு கலந்து கொண்டு பேசினார். அதில், “லால்குடி மற்றும் கல்லக்குடியில் அதிகமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி திமுக கட்சியை வளர்த்து வருகிறோம். லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை.

ஒருபக்கம் சீமான் நம்மை குறை சொல்கிறார். ஒருபக்கம் புதுசா வந்தவர், வரப்போகிறவர் குறை சொல்கிறார். ஒருபக்கம் பார்த்தீர்கள் என்றால் அ.தி.மு.க, 'அடுத்து நாங்கதான்' என்று சொல்கிறார்கள். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும், பா.ம.க நம்மை குறை சொல்கிறார்கள். பா.ஜ.க ஏற்கனவே எதிரியாக இருக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் நேருவின் இந்த பேச்சு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உடையும் என்பதை சூசகமாக தெரிவிக்கிறது என உடன்பிறப்புகள் முனுமுனுத்தபடி கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் புதிய தலைமுறையின் பெருஞ்செய்தி, “நாடாளுமன்ற சூழல் 2026இல் இருக்காது: நேரு பேசுவது?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. மூத்த பத்திரிக்கையாளர் ஆர். மணி கலந்து கொண்டு, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.