தமிழ்நாடு

'இந்த சுங்கச்சாவடிகளை தூக்குங்க' - மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த தமிழக அமைச்சர்

'இந்த சுங்கச்சாவடிகளை தூக்குங்க' - மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த தமிழக அமைச்சர்

Sinekadhara

நகராட்சி எல்லைக்குள் இருக்கும் ஐந்து சுங்கச் சாவடிகளை அகற்றக்கோரி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு அளித்துள்ளார். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் எ.வ.வேலு, செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையினை எட்டு வழித்தடமாக அகலப்படுத்தவும், மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை ஆறு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கவும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், திருச்சி முதல் துவாக்குடி வரையிலும், மதுரவாயல் சந்திப்பு முதல் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வரையிலும் உயர்மட்டச் சாலை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். நீர்நிலைகளின் மீது கட்டப்பட வேண்டிய கட்டுமானங்களுக்கு, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையினால் அனுமதி வழங்குதல் போன்ற விபரங்களை மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.