கோவை வரதராஜபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மண்வெட்டியை எடுத்து முட்செடிகளை களை எடுத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நீலிகோணம்பாளையம், சித்தாபுதூர் பகுதிகளில் புதிதாக நியாயவிலை கடையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். மேலும், புதிதாக ஐந்து நபர்களுக்கு குடும்ப அரிசி அட்டையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வரதராஜபுரத்தில் உள்ள உலக தமிழ் செம்மொழி பூங்காவிற்குச் சென்ற அமைச்சர் அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகளை பார்வையிட்டார்.
அப்போது பூங்காவில் வளர்ந்திருந்த முள் செடிகளை மண்வெட்டி மூலம் களை எடுத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கர ஆகியோர் உடன் இருந்தனர்.