தமிழ்நாடு

மீண்டும் சென்னை வருகிறார் அமித் ஷா

webteam

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே நவம்பர் 21-ல் சென்னை வந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமித் ஷா மீண்டும் வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க அமித் ஷா சென்னை வர உள்ளார்.

அமித் ஷா சென்னை வருகையின்போது, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், அவரிடம் அமித் ஷா ஆதரவு கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் அதிமுக- பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.