தமிழ்நாடு

கோவை அருகே விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து 

கோவை அருகே விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து 

webteam

கோவை இருகூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

கோவையின் இருகூர் பகுதியில் மிக்-21 விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்த விமானத்திலிருந்து பெட்ரோல் டேங்க விழுந்தது. இந்த பெட்ரோல் டேங்க வெடித்து சிதறியதில் அப்பகுதியில் 3 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மிக்-21 விமானம் சூளூர் விமான தளத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் தரிசு நிலத்தில் ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.  இந்த பெட்ரோல் டேங்க் 1200 லீட்டர் கொள்ளவு கொண்டது. இந்தப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்திவருகின்றனர்.