வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயல், வடதமிழகத்தை நோக்கி நகரும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக 3 மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.