தமிழ்நாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா

webteam

சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான அடிக்கல் நாட்டுகிறார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் இந்த நினைவு வளைவு அமைக்கப்படுகிறது. அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 66 அடி அகலமும், 52 அடி உயரமும் கொண்டதாக எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. மாநிலக் கல்லூரி அருகே 2.52 கோடி மதிப்பீட்டில் இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படவுள்ளது.