தமிழ்நாடு

மேட்டூர் நீர் திறப்பு : குளித்தலையில் தண்டோரா எச்சரிக்கை

மேட்டூர் நீர் திறப்பு : குளித்தலையில் தண்டோரா எச்சரிக்கை

webteam

மேட்டூர் அணை நீர் திறப்பின் அதிகரிப்பால், குளித்தலை கிராம மக்களுக்கு தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 118 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்று இரவு 8 மணி முதல் மேட்டூர் அணியிலிருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 20,000 கனஅடியாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது 30,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பையொட்டி, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் குளித்தலை பகுதியில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாளைக்குள் 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோர பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.