தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை

மேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை

webteam

மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கியிருந்த புராதான சின்னமான நந்திசிலை முழுவதுமாக வெளியே தெரிகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அணையின் நீர் தேக்க பகுதியில், ஆணை கட்டுவதற்கு முன்பாக சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்துள்ளது. அதில் குறிப்பாக பாலவாடி, நீதிபுரம், கோவிந்தபாடி, நாகமரை உள்ளிட்ட கிராமங்கள் பண்ணவாடி பகுதியை ஒட்டி இருந்துள்ளது, அந்த பகுதியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலையம் வித்தியாசமான முறையில் சுரங்க பாதையுடன் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


அப்பகுதி பொதுமக்கள் இந்த கோவிலில் வழிபட்டுவந்துள்ளனர். அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மேட்டூரில் அணை கட்டப்போவதாக கூறி இந்த பகுதியில் வசித்தவர்களை வெளியேற்றினார்கள். இதனால் அந்த கோவில்கள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒவ்வொரு முறையும் குறையும் போது தண்ணீரில் மூழ்கி உள்ள நந்தி வெளியே தெரியும். இதனை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது அணையின் நீர் மட்டம் 44 அடியாக குறைந்து விட்டதால் நந்தி சிலை மற்றும் அதன் கோபுரமும் முழுவதுமாக வெளியே தெரிகிறது.இதனை காண விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.