தமிழ்நாடு

100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம்: மேட்டூர் அணை திறப்பு எப்போது?

100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம்: மேட்டூர் அணை திறப்பு எப்போது?

webteam

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 250 நாள்களைக் கடந்தும் 100 அடிக்கு மேல் நீடிப்பதால், டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12- ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரம் மேட்டூர் அணை. அந்த அணையிலிருந்து ஆண்டுதோறும் சம்பா நெல் பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டுகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் உரிய தேதியில் அணையைத் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13- ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தற்போது மேட்டூர் அணையில் 100.92 அடி நீர்மட்டம் உள்ளது. கடந்த 250 நாள்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது.

கடந்த 2005-ஆம் ஆண்டு அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 427 நாள்களாக 100 அடிக்கும்  அதிகமாக நீர் இருந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் அணையில் இந்த நிலை காணப்படுகிறது. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா சாகுபடிக்கு தண்ணீரைத் திறக்க வாய்ப்பு உள்ளது. பருவமழை தொடங்கிய பின், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.