கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு கடந்த சில நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 50.15 அடியை எட்டியிருக்கிறது. எனினும் இந்த நீரை கொண்டு பாசனத்திற்கு நீர் திறக்க முடியாது என்றே சொல்லப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 50.15 அடியாகவும் நீர் இருப்பு 17.90 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.