தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

webteam

மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில், வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.  

கோவை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வரும் நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள  ஏடி காலனியில் இருக்கும் குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் சாய்ந்ததால், 4 வீடுகள் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தன. அப்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்‌டனர். 

பொதுமக்களி‌ன் உதவியோடு 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்க காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்த விழுந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.