தமிழ்நாடு

17 பேர் உயிரிழந்த விவகாரம் : முற்றிலும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்

17 பேர் உயிரிழந்த விவகாரம் : முற்றிலும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்

webteam

மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் உள்ள ஏடி காலனியில், சி‌வசுப்பிரமணியம் என்பவர் எழுப்பிய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விதிமுறைகளை மீறி அதிக உயரமுள்ள சுவர் எழுப்பிய குற்றத்திற்காக வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். 

இதனிடையே, ‌20 அடி உயரமுள்ள அந்த சர்ச்சைக்குரிய சுவரின் எஞ்சிய பகுதிகளை, நகராட்சி மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து இடித்தனர். அத்துடன் சர்ச்சைக்குரிய சுவற்றுக்கு அருகிலுள்ள மற்ற உயரமான சுவர்களும் இடிக்கப்பட்ட‌ன. மற்ற சுவர்களை இடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அவை இடிக்கப்பட்டன.