கடலூர் மாவட்டத்தில், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மின்வாரிய ஊழியர்கள் மீட்டர்களைப் பொருத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில், இலவச மின்சார இணைப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மின்வாரிய ஊழியர்கள் மீட்டர்களை பொருத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் உதய்மின் திட்டத்தின் எதிரொலியாக இலவச மின்சாரத்தை குறைக்கும் நோக்கோடு மீட்டர்கள் பொருத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயத்திற்காக இலவசமாக வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி மோட்டார்கள் மூலம் கிணறுகளிலிருந்து பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் எடுத்து வந்தனர். இலவச மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவிடுவதற்காகவே மீட்டர்கள் பொருத்துவதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.