தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Sinekadhara

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

மேலும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 26-ஆம் தேதிவரை 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.