வானிலை ஆய்வு மையம்  முகநூல்
தமிழ்நாடு

‘வடதமிழகத்தில் அதிக மழை இருக்கும்’ - வானிலை ஆய்வு மையம்! எப்போது தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை...?

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதியளவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதியளவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்திற்கு மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகம் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் அதிக மழை இருக்கும் என்றும், அக்டோபர் 3ஆவது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் ஏற்கெனவே கூறப்பட்டிருந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.