தமிழ்நாட்டிற்கு கடும் வெயில் pt web
தமிழ்நாடு

“ஜூன் 2ஆம் தேதி வரை இதே நிலைதான்” - வெயில் தொடர்பாக வானிலை ஆய்வு மையம்

PT WEB

வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது புயல் மேற்கு வங்கத்தில் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகளவாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

வரும் ஜூன் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதே நிலை நீடிக்கும் என்றும், 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.