கோடைக்காலம் முடிவடைந்தும், வெப்பம் குறையாமல் மக்களை வறுத்தெடுத்து வந்த நிலையில், வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வெப்பத்தை குறைத்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.