தமிழ்நாடு

"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்" - அப்படினா மழை?!

"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்" - அப்படினா மழை?!

webteam

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி தாழ்வுநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு நாட்களுக்கு குளிரான காலநிலை தொடரும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.