தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை 

webteam

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், உச்சநீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேகாலயா நீதிமன்றத்தை வலுப்படுத்த தஹிலை நியமனம் செய்ய பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.