மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வாழை இலையில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது.
கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கோவில்கள், ஊரடங்கு தளர்வுகளால் திறக்கப்பட்டதில் இருந்து, பக்தர்களுக்கு பார்சல் மூலமாகவே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 754 கோவில்களிலும், மதிய அன்னதானத்தை வாழை இலை போட்டு பரிமாற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பந்தியில் வாழையிலை போட்டு அன்னதானம் பரிமாறப்பட்டது. 17 மாதங்களுக்குப் பிறகு கோவிலில் இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இனி, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை அன்னதானம் இலையில் பரிமாறப்படும் எனவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.