தமிழகத்தில் 4 மாவட்டஙக்ளில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவின் சார்பில் ஐ.சி.எம்.ஆரின் துணை இயக்குனரும் மூத்த விஞ்ஞானியான பிரதீர் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டஙக்ளில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் இருப்பதால் நகரப்பகுதியில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கை உயர்த்த வேண்டும். எண்ணிக்கையை உயர்த்தினால்தான் நோய்த்தொற்றை கண்டறிய முடியும். எனவே தொற்று அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” எனத் தெரிவித்தார்.