ஊழியர்கள் போராட்டம் புதியதலைமுறை
தமிழ்நாடு

”போதிய மருத்துவர்கள் இல்லாததே சிக்கல்களுக்கு முக்கிய காரணம்..” - மருத்துவர் சங்கம் சொல்வதென்ன?

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக, சென்னையில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தினர் செய்தியாளார்களை சந்தித்து வருகின்றனர். அதில் நிரந்தரமான உரிய பயிற்சிப்பெற்ற பாதுகாவலரை தமிழ்நாடு அரசு நியமிக்கவேண்டும். ஒரு நோயாளிக்கு இரு அட்டெண்டர்கள் வேண்டும் என்று தங்களின் பல கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.