தமிழ்நாடு

”நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் எனது மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” : தந்தை வேதனை

”நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் எனது மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” : தந்தை வேதனை

sharpana

திருவள்ளூரில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை ஆளுநருக்கு அனுப்பக்கோரி திருவள்ளூர் ஆட்சியரிடம் மாணவியின் தந்தை வரைவு கடிதம் அளித்துள்ளார்.

திருவள்ளூரைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் என்பவரின் மகள் ரயீஸா. தனியார் பள்ளியில் மாநில அரசு பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பில் 479 (95.80%) மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 577.26 (96.21%) மதிப்பெண்களும் பெற்று நீட் தேர்வில் 150 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சிலிங் மூலம் மருத்துவ படிப்புக்கும், ஆயூஷ் கவுன்சிலிங் மூலம் சித்தா படிப்புக்கும் விண்ணப்பித்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை.

இதனால், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி மருத்துவ கனவு தமது மகளுக்கு நிறைவேறி இருக்கும் என்றும், நீட் தேர்வால் மகளின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை என்றும் மாணவியியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது மகளுக்கு எந்த வகையிலும் பலன்தராத 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திருவள்ளூர் ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தை ஆளுநருக்கு திரும்ப கொடுத்து விட வேண்டும் எனவும் கடிதம் அளித்துள்ளார்.