மருத்துவகல்லூரி கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 1,143 இடங்கள் காலியாக உள்ளன!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவடைந்தப்பின், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2 சுற்று கலந்தாய்வு நடந்தது. அதன்பின் தற்போது 3ஆவது சுற்று கலந்தாய்வு நடைபெற்றுள்ளது.

கடந்த கலந்தாய்வுகளில் இடங்களை தேர்வு செய்தவர்களில் சிலர், கல்லூரியில் சேராமல் இருப்பது இந்த கலந்தாய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்களும், 62 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன என அறியப்பட்டுள்ளது. இதேபோன்று, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ் இடங்களும், 519 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1,143 இடங்கள் காலியாக உள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 13 லட்சத்து 50 ஆயிரமும், அரசு ஒதுக்கீட்டில் 4 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். இச்சூழலில் காலியாக உள்ள இடங்கள் அடுத்தக் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி தெரிவித்துள்ளார்.