இனி வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என தமிழக மருத்துவத்துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது. மேலும் பெரும்பாலானோர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இனிமேல் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி முகாம்களை நடத்திக்கொள்ள மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் என மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.