மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்ட விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்த்து தெரிவித்து வைகோ கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மே 16 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரை வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பின்போது பார்வையிட வரவில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டம், மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்தது போன்ற தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுபட்டதாக அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் கருப்பு கொடி காட்டியும், கருப்பு நிற பலூன்கள் பறக்க விட்டும் தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர். அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறபடுத்த முயன்றப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.