தமிழ்நாடு

தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு

தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு

Rasus

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி இன்று உயிரிழந்தார்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாள் நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சி மதுரையில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. அப்போது, விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது மண்ணெண்யை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள், ரவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் உணர்ச்சிபொங்க காணப்பட்ட வைகோ, அப்போது மேடையில் கண்ணீர் மல்க பேசினார். 99 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.