மருத்துவக் கலந்தாய்வு  முகநூல்
தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

PT WEB

தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு 9,200 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 2,150 இடங்களும் உள்ளன. இவற்றில் சேர இந்தாண்டு 43,36 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அதில்," பொது பிரிவினருக்கான பட்டியலில், நாமக்கல் மாவட்ட மாணவர் ரஜினிஷ் 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரூபிகா 669 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். அரசு மையங்களில் நீட் தேர்வுக்கு படித்த மாணவர்கள் 4 பேர், முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளார்கள்.

கடந்தாண்டை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது. இன்று ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை ஓமந்தூரார் மருத்துவமனை அரங்கில் நடைபெறவுள்ளது.” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.