கூலித் தொழிலாளி முனுசாமி pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை: வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால் விபரீத முடிவெடுத்த கூலித் தொழிலாளி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால், கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலங்குடியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முனுசாமி, தனியார் வங்கியில் சுமார் ஒன்றரை லட்சம் கடன் பெற்றுள்ளார். விபத்தில் சிக்கியதால் அண்மை காலமாக, கடன் தவணையை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, முனுசாமியின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

Protest

'நீ இறந்து விடு, காப்பீடு கிளைம் செய்து கொள்கிறோம்' என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து முனுசாமி, இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கி மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Protest

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.