தமிழ்நாடு

“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி

“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி

webteam

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, 8 வழிச் சாலை திட்டத்தில் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு தனிபட்ட முறையில் என்னென்ன இழப்பீடுகள் கிட‌க்கும் என்பது குறித்து விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு குறைந்தபட்சம் 21 லட்சம் ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். கிணறு, கொட்டகை, மட்டுமின்றி பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் விவசாயிகளின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.