தமிழ்நாடு

“மரணத்தின் மடியில் மழலையர்கள்” தடையை மீறி திரையிடப்பட்ட குறும்படம்

“மரணத்தின் மடியில் மழலையர்கள்” தடையை மீறி திரையிடப்பட்ட குறும்படம்

rajakannan

“மரணத்தின் மடியில் மழலைகள்” குறும்படத்திற்கு தடைவித்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.

போபால் விஷவாயு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மரணத்தின் மடியில் மழலையர்கள்' குறும்படம் தடையை மீறி இன்று திரையிடப்பட்டது. சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வணிகர்கள் சங்கம் சார்பில் 12 நிமிடங்கள் கொண்ட குறும்படம் காட்சிபடுத்தப்பட்டது. 

போபால் விஷவாயு சம்பவத்தைம் போல் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் மக்கள் பாதிக்க நேரிடலாம் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடியில் 'மரணத்தின் மடியில் மழலையர்கள்' குடும்படம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இந்த குறும்படத்தை வெளியிட தடை விதித்த நிலையில், தடையை மீறி பத்திரிக்கையாளர்களுக்கு இன்று காட்சிபடுத்தப்பட்டது. 

குறும்படத்தை திரையிட்டு பேசிய வெள்ளையன், “மரணத்தின் மடியில் மழலைகள்” குறும்படத்திற்கு தடைவித்திருப்பது ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு எதிரானது என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று மக்களுக்கு திரையிடுவோம் என்றும் அவர் கூறினார்.