மாஞ்சோலை pt web
தமிழ்நாடு

மாஞ்சோலை சுற்றுலா செல்ல இருந்த தடை நீக்கம்; இன்று முதல் சுற்றுலாவுக்கு அனுமதி!

மாஞ்சோலை சூழல் சுற்றுலாவுக்கு செல்ல இன்றுமுதல் மீண்டும் அனுமதி. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

PT WEB

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டது. இதை குறிப்பிட்டு, ‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை இருக்கும் நிலையில், சூழல் சுற்றுலா திட்டம் மறைமுகமாக மூடப்படுகிறதா?’ என்ற கேள்வியை புதிய தலைமுறை எழுப்பியது.

மாஞ்சோலை தமிழ்நாடு அரசு பேருந்து

இதற்கு மழை காரணமாக சுற்றுலா நிறுத்தப்பட்டதாக வனத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. தற்போது மழை நின்ற சூழலில் சுற்றுலாவுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்தும் புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல இன்று முதல் அனுமதிக்க அளிக்கப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 18 வாகனங்களுக்கு அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.