வாக்குச்சாவடி மையத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவர், பாதிக்கப்பட்ட பெண் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்கு செலுத்த வரிசையில் காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து..!

T- கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி என்ற (49) பெண்ணிற்கு கத்திக்குத்து.

PT WEB

செய்தியாளர் - பாலாஜி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி சுமார் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டியில் 276 வாக்குச்சாவடிகளில் 44 மையங்கள் பதற்றமானவை என்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி

துணை ராணுவப்படையினர் உட்பட 3,000 காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் அங்கே அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்தவகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் T- கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி என்ற (49) பெண்ணிற்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

பெண்ணின் முன்னாள் கணவரான ஏழுமலை (52) கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஏழுமலையை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பெண் கழுத்தில் கத்திக்குத்துபட்ட நிலையில் உடனடியாக அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பினார்.

பாதிக்கப்பட்ட பெண்

இதேபோல விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவி கூட்டால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குளவிகளை மருந்து அடித்து தீயணைப்புத்துறை வீரர்கள் வெளியேற்றிய பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள், வாக்களிக்க வரும் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.