தமிழ்நாடு

‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ -  சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்

‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ -  சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்

rajakannan

மேட்டுபாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இதில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளரின் கல்லூரி படிக்கும் மகள் நிவேதா, 10 ம் வகுப்பு படிக்கும் மகன் ராமநாதன் ஆகியோரும் உயிரிழந்தனர்.  

செல்வராஜின் மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளையும், மனைவியின் தங்கையான சிவகாமி வளர்த்து வந்துள்ளார். செல்வராஜின் வீடு விபத்து நடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. நிவேதாவும், ரங்கநாதனும்  சித்தி சிவகாமி வீட்டில் தூங்கிய நிலையில் கருங்கல் சுற்றுசுவர் சாய்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

சம்பவத்தன்று டீ கடையிலேயே தங்கி விட்டதாகவும், காலையில்தான் சுவர் இடிந்து மகனும், மகளும் உயிரிழந்தது தனக்கு தெரியவந்தாகவும் செல்வராஜ் தெரிவிக்கின்றார். தனக்கு இப்போது யாரும் இல்லாமல் அனாதையாக இருப்பதாக செல்வராஜ் கண்கலங்குகின்றார். மேலும், இறந்து போன தனது மகன், மகள் ஆகிய இருவரின் 4 கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தானம் வழங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது தாயார்தான் பெரியப்பா மகன் ரங்கநாதன், மகள் நிவேதாவை வளர்த்ததாகவும் தனது அம்மா சிவகாமியுடன் அவர்களும் சேர்ந்து உயிரிழந்து விட்டதாகவும் சிவகாமியின் மகன் தெரிவித்தார். லட்சுமி இறந்து விட்ட நிலையில் அவரது குழந்தைகள் இருவரையும் சிவகாமி பார்த்துக் கொண்ட நிலையில், நிவேதாவை கல்லூரி படிப்பும், ரங்கநாதனை பள்ளி படிப்பும் படிக்க வைத்ததாகவும் இப்போது சிவகாமி, அவரது மகள் வைதேகி, ரங்கநாதன், நிவேதா என யாரும் இப்போது உயிரோடு இல்லை எனவும் அவரது உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர். 

குடும்ப உறவுகளை இழந்த நிலையிலும் தனது மகன், மகள் ஆகியோரது கண்கள் யாருக்காவது பயன்படும் என்று 4 கண்களையும் தானம் செய்து உயர்ந்து நிற்கின்றார் டீக்கடை தொழிலாளி செல்வராஜ்.