தமிழ்நாடு

நிச்சயிக்கப்பட்டப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாப்பிள்ளை கைது

நிச்சயிக்கப்பட்டப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாப்பிள்ளை கைது

PT

நிச்சயிக்கப்பட்டப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் வடிவேலன்(30). இவருக்கும் திண்டிவனம் மரக்காணம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கலைச்செல்வி கர்ப்பமாகியுள்ளார். இதனைக் கலைச்செல்வி தொலைப்பேசி வாயிலாக வடிவேலனுக்குத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தில் தடை ஏற்பட்டது.

வடிவேலனின் உறவினர்களிடம் பேசியும் எந்தவித முடிவும் எட்டப்படாததால் கலைச்செல்வி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து வடிவேலனை கைது செய்தார்.