தமிழ்நாடு

கேரளாவிலும் ஆவின் ; முன்னோட்டம் பார்க்கும் நிர்வாகம்

கேரளாவிலும் ஆவின் ; முன்னோட்டம் பார்க்கும் நிர்வாகம்

webteam

கோவையில் விற்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்துகள் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 25 ரூபாய்க்கு அரை லிட்டர் தயிர் பாக்கெட்டை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக, அந்த
பாக்கெட்டில் ஆவின் தயிர் என்று ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்
கோவையில் விற்கப்படும் அரை லிட்டர் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

இது குறித்து கோவை ஆவின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கின்றனர்
என்றும், அவர்களைக் கவர இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும் கேரளாவில் பால் பொருட்களுக்கு தேவை
அதிகமிருப்பதால், அங்கும் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், எனவே மலையாள எழுத்துக்கள்
அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.