நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசியலமைப்புச் சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.
நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகாரனது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை” என்று தெரிவித்துள்ளார்.