தமிழ்நாடு

மகேந்திரகிரி மர்மம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வு

மகேந்திரகிரி மர்மம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வு

webteam

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி அருகே வெடிபொருள் வெடித்ததாகக் கூறப்படும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி அருகே உள்ள குறவமலையில் கடந்த 23 ஆம் தேதி அதிகளவு சப்தத்துடன், 200 மீட்டர் உயரத்திற்கு வெண்புகை தோன்றியது. அதனை, அருகிலிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். குறவமலையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ உந்தும தயாரிப்பு மையம் உள்ளது. 

இந்த பகுதியில் ஏற்கனவே, ஆளில்லா விமானம் பறப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான பொருள் வெடித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அதனையடுத்து, இன்று காலை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், வள்ளியூர் டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், வனத்துறையினர் என 24 பேர் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறது.