Maharaja movie still PT
தமிழ்நாடு

”ஒரு நாளைக்கு 1000 போன் வரை வந்தது; சிலர் கரெக்‌ஷன் சொன்னாங்க” - ’மகாராஜா’ பட இயக்குநர் நெகிழ்ச்சி!

சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

PT WEB

சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் வெற்றி குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பாய்ஸ் மணிகண்டன்

”இந்தப் படம் பார்த்ததுக்கு பிறகு இன்னும் பெஸ்ட் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இதில் நடித்ததற்காக எல்லோரும் எனக்கு கால் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த மகாராஜா கடல்ல நான் ஒரு துளி... வாழ்த்துகளால் என்னை திக்குமுக்காட வெச்சுட்டாங்க...” என்றார்.

அருள்தாசன் நடிகர்

”படம் பார்த்துட்டு எல்லோரும் பாஸ்ட்டிவ் ரிவியூ கொடுத்தாங்க. புரொடியூசர் சுதன் சார் சொன்ன மாதிரியே பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. இது எனக்கு சந்தோஷம். இதன் பிறகு நிறைய வெற்றி இவர்களுக்கு கிடைக்கவேண்டும். இயக்குனர் நித்திலன் சாமிநாதன் சின்சியரான வொர்க்கர். ஷூட்டிங்ல முழுக்க முழுக்க எங்களுடன்தான் இருந்து, எங்க எல்லோருகிட்டயும் நுணுக்கமா வேலை வாங்கினார்.

விஜய் சேதுபதிக்கு ஷார்ட் டைம்ல இது 50 ஆவது படம் . இதில் பெரிய விஷயம் என்றால் இது வெற்றி படமாக அமைந்தது இன்னும் பெரிய விஷயம். பேன் இந்தியா நடிகரான இவருக்கு ஒரு தம்பியா ஜெயிச்சது எனக்கு பெரிய சந்தோஷம். 75 ஆவது 100 ஆவது படம்னு எல்லாம் வரிசையாக தொடரணும்.

சிங்கம் புலிக்கு பெரிய சேஞ் ஓவர் கொடுத்த படம் மகாராஜா. நாங்க எல்லோருல் சினிமால ஒன்னா கஷ்டப்பட்டவங்க. எல்லோருக்கும் இப்படம் பெயர் வாங்கி கொடுத்திருக்கு. ” என்றார்

நடிகர் வினோத்

”மலையாளத்தில் இருந்து நிறைய கால்ஸ் வந்துட்டு இருக்கு. நிறைய மலையாள டைரக்டர்ஸ் கால் பண்ணி பேசுறாங்க. சேது சார் கூட நடிச்சது பெரிய ஹாப்பி.

மம்தா மோகன் தாஸ்

”என்னை இந்தப் படத்துக்கு நடிக்க கூப்பிட்ட குழுவுக்கு நன்றி. சேது சார் 50 ஆவது படத்தில் நான் நடித்தது ஹாப்பி. மலையாள மக்கள் எல்லோரும் நல்ல படத்தில் நடிச்சிருக்காங்கன்னு சொல்லி போன் பண்றாங்க. டைரக்டர் நித்திலனுக்கும் பெரிய நன்றி.”

இயக்குநர் நித்திலன்

”படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி. ஒரு நாளைக்கு 1000 போன் வரைக்கும் வந்தது. சிலர் கரெக்‌ஷன் சொன்னாங்க. அதை அடுத்த படத்தில் சரி பண்ணிக்கிறேன். மேன் மக்கள் மேன் மக்கள்தான்.

தொப்பினு ஒரு ஆடியோ லான்ச்ல ஆங்கர் சிங்கம் புலி பேசினார். அப்போ அந்த மேடையில் அவர் பேசுன பேச்ச கேட்டதும்தான் இந்தப் படத்தில் சிங்கம் புலியை கமிட் பண்ணினேன்” என்றார்.

விஜய் சேதுபதி

”இந்தப் படத்தின் கதை கேட்கும் போது பெரிய நம்பிக்கை இருந்தது. கதை கேட்கும் போது மட்டும்தான் கதையோட அட் ராக்‌ஷன் தெரியும். நடிக்கும் போது இதெல்லாம் தெரியாது. ப்ரிவியூ ஷோ போடுற வரைக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. என்னுடைய முந்தைய படம் சரியா போகல. இதனால நிறைய கேள்விகள் எனக்குள்ள இருந்தது. கேள்விகாக மகாராஜா பண்ணல.” என்றார்