தமிழ்நாடு

மயிலாடுதுறை மகா புஷ்கர விழா நிறைவு

மயிலாடுதுறை மகா புஷ்கர விழா நிறைவு

webteam


நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்று வந்த மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவடைந்தது.

மகா புஷ்கர விழாவில் 12 நாட்களில் 20 லட்சம் பேர் நீராடியதாக விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். கடைசி நாளான இன்று காவிரியாற்றில் ஆயிரக் கணக்கானோர் இன்று புனித நீராடி வழிபட்டனர். 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காவிரியில் புனித நீராடினால் மூன்றரைகோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மகா புஷ்கரத்தில் கலந்து கொண்டு காவிரியில் நீராடினர். காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் காவிரியில் நீராட மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விழாவின் 9ஆம் நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு காவிரியில் நீராடினார்.