அரபிக்கடலில் உருவான புயலுக்கு ‘மகா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும் லட்சத்தீவில் இருந்து 25 கி.மீ வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா புயலால் காற்றின் வேகம் 95 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் க்யார் புயல் உருவாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக ‘மகா’ புயல் உருவாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீட்டர் தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் மையம் கொண்டுள்ளது.