தமிழ்நாடு

மகா புஷ்கரம் 5ஆம் நாள்: நீராட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மகா புஷ்கரம் 5ஆம் நாள்: நீராட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

webteam

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற மகா புஷ்கரம் விழாவின் 5ஆம் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெற்றதால், குரு பகவான் துலாம் ராசிக்கு பெயர்ந்துள்ளதாக ஜோசிய வல்லுநர்கள் கூறுகின்றனர். துலாம் ராசிக்குரிய புண்ணிய நதி காவிரியாகும். இதனால் கடந்த 12ஆம் தேதி முதல், வரும் 24ஆம் தேதி வரை மயிலாடுதுறை காவிரியில் மகா புஸ்கரம் விழா நடைபெறுகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்த மகா புஷ்கரம் விழாவில், இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடியுள்ளனர். இதற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு வருகின்ற 20ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5ஆம் நாளான இன்று தமிழகம் மட்டுமன்றி மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனித நீராடினர்.