தமிழ்நாடு

மகா புஷ்கரம் விழா: மேட்டூர் அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

மகா புஷ்கரம் விழா: மேட்டூர் அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

webteam

மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெற்றதால், குரு பகவான் துலாம் ராசிக்கு பெயர்ந்துள்ளதாக ஜோசிய வல்லுநர்கள் கூறுகின்றனர். துலாம் ராசிக்குரிய புண்ணிய நதி காவிரியாகும். எனவே இத்தகைய கால கட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் காவிரியில் புனித நீராடினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி நேற்று முதல், வரும் 24ஆம் தேதி வரை மயிலாடுதுறை காவிரியில் மகா புஸ்கரம் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று இரவு 9 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரிக்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டதுள்ளது. முதற்கட்டமாக இரவு 9 மணி முதல் வினாடிக்கு 700 கன அடியிலிருத்து 2,000 கன அடி வரையிலும், 11 மணிக்கு 4,000 கன அடிவரையிலும்ம், 1 மணிக்கு 6,000 கன அடிவரையிலும் நீர் திறக்கப்படும். இதைத்தொடர்ந்து 3 மணிக்கு 8,000 கன அடி மற்றும் காலை 5 மணிக்கு 10,000 கனஅடி வரையிலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் மேட்டூர் அணையை ஒட்டியுள்ள காவிரி பாலம், மாதையன் குட்டை, நவப்பட்டி, கோல் நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளின் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என வருவாய் துறையினர் தாண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர்.