டெல்லி கணேஷ், மகா டெல்லி கணேஷ் pt web
தமிழ்நாடு

“திடீரென்று இப்படி.. எதிர்பார்க்கவே இல்ல.. எங்களுக்கு கஷ்டம்தான்”- மறைந்த டெல்லி கணேஷின் மகன் வேதனை!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார்.

PT WEB

1976ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம், திரையுலகிலகில் அறிமுகமானவர் டெல்லி கணேஷ். தொடர்ந்து, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி பெற்றவர்.

மூத்த நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

நடிப்பு மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்தவர். 80 மற்றும் 90களில் தங்கள் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, டெல்லி கணேஷ் தங்களுக்கு குரல் கொடுப்பதை, மோகன்லால், சிரஞ்சீவி என இருவருமே விரும்பினர்.

மறைந்தார் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்

சின்னத்திரை, இணைய தொடர்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், 1964 முத 1974ஆம் ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 80வயதில் மறைந்த டெல்லி கணேஷின் உடல், சென்னை ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ் மறைவு தொடர்பாக அவரது மகன் மகா டெல்லி கணேஷ் கூறுகையில், “அப்பாவிற்கு 80 வயதாகிவிட்டது. சமீபத்தில்தான் அவருக்கு சதாபிஷேகம் (80ஆம் கல்யாணம்) கூட செய்திருந்தோம். வயதுமூப்பு காரணமாக சிறிது உடல்நலக்குறைவு இருந்தது. சிகிச்சையும் அளித்து வந்தோம். நேற்று இரவு அவருக்கு மாத்திரை கொடுக்க எழுப்பும்போது அசைவில்லாமல் இருந்தது. அதன்பின் மருத்துவரை அழைத்து பரிசோதித்தபோது, மருத்துவர் அப்பா இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.

மகா டெல்லி கணேஷ்

உறவுக்காரர்கள் சிலர் வரவேண்டியுள்ளது. அவர்களுக்காக காத்திருக்கிறோம். நாளை காலை 10 முதல் 11 மணிக்குள் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மறைவை எதிர்பார்க்கவில்லை. சிறிது உடல்நலமில்லாமல்தான் இருந்தார். இரவுகூட நன்றாக பேசிக்கொண்டுதான் இருந்தார். அக்கா தற்செயலாக பார்க்க வந்திருந்தார். அவரிடமும் நன்றாக பேசிக்கொண்டுதான் இருந்தார். திடீரென்று இப்படி மறைவார் என்று எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து மீண்டு வருவது எங்களுக்கு கஷ்டம்தான்” என தெரிவித்தார்.