தமிழ்நாடு

கைதி செல்வமுருகன் உயிரிழந்த விவகாரம்: சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை

கைதி செல்வமுருகன் உயிரிழந்த விவகாரம்: சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை

webteam

கைதி செல்வமுருகன் உயிரிழந்த வழக்கில் விருதாச்சலம் கிளைச்சிறையில் மாஜிஸ்திரேட் ஆனந்த் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

செல்வ முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் 30ஆம் தேதிதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு விருதாச்சலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் செல்வ முருகன் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே 2 நாட்களாக செல்வமுருகனை தனியார் விடுதியில் வைத்து போலீசார் சித்திரவதை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 செல்வமுருகனின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் ஜிப்மர் மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைதி செல்வமுருகன் உயிரிழந்த வழக்கில் விருதாச்சலம் கிளைச்சிறையில் மாஜிஸ்திரேட் ஆனந்த் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். அங்கிருக்கும் சிறை அதிகாரிகளிடம் 11 மணியிலிருந்து தற்போது வரை விசாரணை நடத்தி வருகிறார்.