தமிழ்நாடு

“முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்று கொண்டிருக்கிறது” - மாஃபா பாண்டியராஜன்

webteam

பல விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சிறுக சிறுக மத்திய அரசிடம் சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃப் காமர்ஸ் எனும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் “ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இன்னும் அதிகாரம் அளிக்க வேண்டும். 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தியுள்ளோம் என்று அவர்கள் சொன்னால்கூட ஏன் மாநிலங்களுக்கு வரக்கூடிய நிதி குறைந்து கொண்டே போகிறது?

தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய நிதி 2000 கோடி குறைந்துவிட்டது. பல விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சிறுக சிறுக மத்திய அரசிடம் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இது மாற்றப்பட வேண்டிய விஷயங்கள். ஜிஎஸ்டியில் தமிழகத்திற்கு 4000 கோடி இழப்பு. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எல்லா மாநிலங்களும் தன்னுரிமையை கொடுக்கின்றன” எனத் தெரிவித்தார்.